Friday, August 21, 2015

சிதம்பர இரகசியம் என்றால் என்ன?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்."

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"


மானுடராக்கை வடிவு சிவலிங்கம்

மானுடராக்கை வடிவு சிதம்பரம்

மானுடராக்கை வடிவு சதாசிவம்

மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,,," என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது. —

Wednesday, August 19, 2015

தமிழ் மன்னன் இராவணன்

ஒழுக்கத்தில் சிறந்து பத்து துறைகளில் வல்லவனாய் திகழ்ந்த இராவணன் மருத்துவ துறையில் இயற்றிய 27 நூல்கள்

1. உடற்கூறு நூல்
2. மலை வாகடம்
3. மாதர் மருத்துவம்
4. இராவணன் – 12000
5. நாடி, எண்வகை பரிசோதனை நூல்
6. இராவணன் வைத்திய சிந்தாமணி
7. இராவணன் மருந்துகள் - 12000
8. இராவணன் நோய் நிதானம் - 72 000
9. இராவணன் – கியாழங்கள் – 7000
10. இராவணன் வாலை வாகடம் – 40000
11. இராவணன் வர்ம ஆதி நூல்
12. வர்ம திறவுகோல் நூல்கள்
13. யாழ்பாணம் – மூலிகை அகராதி
14. யாழ்பாணன் – பொது அகராதி
15. பெரிய மாட்டு வாகடம்
16. நச்சு மருத்துவம்
17. அகால மரண நூல்
18. உடல் தொழில் நூல்
19. தத்துவ விளக்க நூல்
20. இராவணன் பொது மருத்துவம்
21. இராவணன் சுகாதார மருத்துவம்
22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்
23. இராவணன் அறுவை மருத்துவம் – 6000
24. இராவணன் பொருட்பண்பு நூல்
25. பாண்ட புதையல் முறைகள் – 600
26. இராவணன் வில்லை வாகடம்
27. இராவணன் மெழுகு வாகடம்

இந்த தமிழ் மன்னன் இராவணனை அழித்துவிட்டு இராமன் நாடு திரும்பி ஆட்சி அமைத்த நாளையே தீபாவளியாக வட நாட்டவர்கள் கொண்டாடுகிறார்கள்.  நரகாசுரன் வதம் செய்யப்பட நாள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மகாபாரத போர்

பாகுபலி படத்தில் வரும் போர்களக்காட்சிகள் மற்றும் அதில் அமைக்கப்பட்ட திரிசூல வியுகம் ஆகியவை சிறப்பாக பேசப்படுகின்றன.  ஆனால் 40 லட்சம்பேர் பங்குபெற்ற 18 நாட்கள் நடந்த மிகப் பிரமாண்டமான மகாபாரதப் போரில் பல வியுகங்கள்  அமைக்கப்பட்டன.

1.கிராஞ்ச வியுகம் (heron formation)
2.மகர வியுகம் (crocodile formation)
3.கூர்ம வியுகம் (tortoise or turtle formation)
4.திரிஷுல வியுகம் (trident formation)
5.சக்ர வியுகம் (wheel or discus formation)
6.கமலா வியுகம் or பத்மா வியுகம் (lotus formation)
7.கருட வியுகம் (eagle formation)
8.ஊர்மி வியுகம் (ocean formation)
9.மண்டல வியுகம் (galaxy formation)
10.வஜ்ர வியுகம் (diamond or thunderbolt formation)
11.சகட வியுகம் (box or cart formation)
12.அசுர வியுகம் (demon formation)
13.தேவ வியுகம்(divine formation)
14.சூச்சி வியுகம்(needle formation)
15.ஸ்ரிங்கடக வியுகம் (horned formation)
16.சந்திரகல வியுகம் (crescent or curved blade formation)
17.மலர் வியுகம் (garland formation)
18.சர்ப வியுகம் (snake formation)

மகாபாரதத்தில், குருசேத்திரப் போரின் போது பாண்டவர் தரப்பில் 7 அக்குரோணி படைகளும், கௌரவர்கள் தரப்பில் 11 அக்குரோணி படைகளுமாக 18 அக்குரோணி படைகள் பங்கெடுத்தது. ஒரு அக்குரோணி என்பது 21870 தேர்களையும், 21870 யானைகளையும், 65610 குதிரைகளையும், 109350 படை வீரர்களையும் உள்ளடக்கியது.

படைப்பிரிவுகளின் கணக்கு
படைப்பிரிவுகள் பின்வருமாறு கணக்கிடப்படுகின்றன: ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரைகள், ஐந்து படைவீரர்கள் கொண்ட பிரிவு, ஒரு பட்டி எனப்படும்.
3 பட்டிகள் கொண்டது 1 சேனாமுகம்
3 சேனாமுகங்கள் கொண்டது 1 குல்மா
3 குல்மாக்கள் 1 கனம்
3 கனங்கள் 1 வாகினி
3 வாகினிகள் 1 பிரிதனா
3 பிரிதனாக்கள் 1 சம்மு
3 சம்முக்கள் 1 அனிகினி
10 அனிகினிக்கள் 1 அக்குரோணி

குருசேத்திரப்போர் படை விபரங்கள்
குருசேத்திரப் போரில் கௌரவர்களுக்குச் சார்பாக அத்தினாபுரத்துப் படைகளும் அவர்களுக்கு ஆதரவான பிற படைகளுமாகப் 11 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலும், பாஞ்சாலம், விராடம், போன்ற பல்வேறு அரசுகளின் படைகளை உள்ளடக்கிய பாண்டவர்களுக்குச் சார்பான 7 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலுமாகப் போரிட்டன.

கௌரவர் தரப்புப் படைகள்
துரியோதனன் தரப்பில் போரிட்ட படைகள்:
பாகதத்தன் படைகள் - 1 அக்குரோணி
சல்யனின் மதுராப் படைகள் - 2 அக்குரோணிகள்
பூரிசுவரர்கள் - 1 அக்குரோணி
கிருதவர்மன் (கிருட்டிணனின் நாராயணிப் படைகள்) - 1 அக்குரோணி
சயத்திரதன் படைகள் - 1 அக்குரோணி
காம்போச அரசன் சுதக்சினனின் படைகள் - 1 அக்குரோணி
விந்தன், அனுவிந்தன் என்போரின் அவாந்திப் படைகள் - 1 அக்குரோணி
ஐந்து கேகய சகோதரர் படைகள் - 1 அக்குரோணி
அத்தினாபுரத்துப் படைகள் - 3 அக்குரோணி

பாண்டவர் தரப்புப் படைகள்
விருஷ்னி வம்சத்துச் சாத்யகியின் படைகள் - 1 அக்குரோணி
நீலனின் மகிசுமதிப் படைகள் - 1 அக்குரோணி
சேதிசு அரசர் திருட்டகேதுவின் படைகள் - 1 அக்குரோணி
சராசந்தனின் மகன் சயத்சேனனின் படைகள் - 1 அக்குரோணி
துருபதனின் படைகள் - 1 அக்குரோணி
மத்சய அரசன் விராடனின் படைகள் - 1 அக்குரோணி
திராவிட அரசர்களின் படைகள் (சோழரும் ,பாண்டியரும்) - 1 அக்குரோணி

தற்போதைய கணக்குப்படி பாண்டவர்கள் படையில் 7 அக்குரோணி
(15,30,900 படைகளும்) கௌரவர் படையில் 11 அக்குரோணி
(24,05,700 படைகளும்) இருந்தன.