Friday, October 24, 2014
இந்து சமுத்திரத்தில் மூழ்கிய கண்டம்
ஆதித் தமிழர்கள் வாழ்ந்த கடலில் மூழ்கிய லெமூரியா கண்டத்தை நாம் நெருங்கிவிட்டோம் என்றே எண்ண முடிகிறது அந்த அறிவிப்பின் மூலமாக!. இப்போதைய தமிழகத்துக்கு தெற்கேயேும், கிழக்கிலும், மேற்கிலும் பரவியிருந்த கண்டமாகக் கருதப்படுவது லெமூரியா எனப்படும் குமரிக் கண்டம். கிழக்கே ஆஸ்திரேலியா வரையிலும் மேற்கே ஆப்பிரிக்காவை ஒட்டிய மடகாஸ்கர் தீவு வரையிலும் பரவியிருந்ததாகக் கூறப்படும் இந்தக் கண்டம் பின்னர் கடலில் மூழ்கி அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
இந்திய பெருங்கடலுக்கு அடியில் புதைந்திருக்கும் மிகப்பெரிய கண்டம் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நார்வே நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனர். சுமார் 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ரொடினியா என்ற பெயரில் ஒட்டுமொத்த உலகமே ஒரே நிலப்பரப்பாக இருந்தது. பின்னர் இவை ஒவ்வொன்றாக படிப்படியாக விலகி இருக்கின்றன. இப்படி விலகியவின் மிகப் பெரும் பகுதி இந்தியப் பெருங்கடலில் மூழ்கியதாகவும் அதன் ஒரு நிலப்பரப்பு தற்போது கண்டறியப்பட்டிருப்பதாகவும் அறிவித்திருக்கின்றனர்.
இந்திய பெருங்கடலுக்குள் புதைந்திருக்கும் இந்த நிலப்பகுதிக்கு மொரிஷியா என்று பெயரிடப்பட்டிருக்கிறது. தற்போது கடலுக்குள் மூழ்கிக் கிடக்கும் இந்த நிலப்பகுதியானது சுமார் 2000 முதல் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு மேலே இருந்திருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.
அண்மையில் மொரிஷியஸ் தீவுகளின் கடற்கரை மணலை ஆராய்ந்த பிறகு போதுதான் 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த சிர்கோன் என்கிற துகள்களையும் கண்டறிந்துள்ளனர். இந்த சிர்கோன் துகள்கள் கண்டங்களின் மேல்பரப்பில் காணப்படுபவை, மிக மிகத் தொன்மையானவையாம்.மொரீஷியஸ் தீவுப்பகுதியில் நடந்த எரிமலை வெடிப்பில் இந்த மூழ்கிய கண்டம் மேலேவந்து மொரீஷியஸ் தீவுநிலப்பகுதியுடன் மோதி மீண்டும் கடலுக்குள் சென்றிருக்கக்கூடும் என்றும் கூறுகின்றனர்.
இந்தியப்பெருங்கடலுக்குள் மூழ்கியிருக்கும் மொரீஷியா கண்டத்தின் ஒரு சிறுபகுதி இன்னமும் கடலுக்கு வெளியில் தெரியலாம் என்றும் இந்தியப்பெருங்கடலின் மத்தியில் இருக்கும் சீஷெல்ஸ் தீவு அப்படியானதொரு நிலமாக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
சரி இந்த மொரிஷியாவுக்கும் நம்ம லெமூரியா கண்டத்துக்கும் என்ன தொடர்பு? ஆதித் தமிழர்கள் வாழ்ந்த தமிழ்நாட்டின் தென்கோடி நிலப்பரப்பான ராமேஸ்வரத்துக்கும் தெற்கே கடலுக்குள் லெமூரிய கண்டம் என்கிற கண்டம் மூழ்கியிருப்பதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. அப்படியானால் நம்ம லெமூரியா கண்டம்தான் அந்த மொரிஷியாவா என்ற தேடல் தொடங்கியிருக்கிறது...இன்னும் சில காலங்களில் நம்ம ஆதி கண்டத்தை எட்டிவிடலாம்!
Tuesday, October 21, 2014
தமிழ் மொழியின் சிறப்புகளில்
தமிழின் பெருமையை உலகம் போற்றுகிறது. தமிழர் நாமோ எம் மொழியின் சிறப்பை உணராமல் அந்நிய மொழியே உயர்வென எண்ணி அடிமை பூணுகின்றோம். தமிழின் சிறப்புணர்ந்து அதற்கென உயர் இடம் கொடுத்த சில உலகப் புகழ் பெற்ற இடங்கள்:
* சீனப் பெருஞ்சுவரில் நுழை வாயிலில் "பாளையகரர்கள் நுழை வாயில்" என்று தமிழில் எழுதப்பட்டிருக்கின்றதாம்.
* கனடா பாராளுமன்றத்தில் தமிழ்மொழியில் பாராளுமன்றம் என்பது பொறிக்கப்பட்டிருக்கின்றது.
* உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில் தமிழ் மொழியில் நீர் வீழ்ச்சிக்கு அருகே உள்ள ஒரு இடத்தில் அதன் பெயர் இடம் பெற்று இருக்கின்றது...
* ரஷ்ய அதிபர் மாளிகையில் தமிழ் மொழியிலும் மாளிகையின் பெயர் பொறிக்கப்பட்டு இருக்கின்றது.
* 1947 ஆங்கிலேயர்கள் மாநாட்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கலாமா என்ற விவாதத்தின் போது ஆங்கிலேய தளபதி "இந்தியாவின் மிக பெரியசொத்தான
திருக்குறளை நாம் எடுத்து வந்தாகி விட்டது...இனிமேல்
அது வெறும் மண்தான்..ஆகவே அது நமக்கு தேவை இல்லை" என்று கூறினாராம்..
திருக்குறள் இந்தியாவின் சொத்து என அவர் கூறியது தவறு. அது தமிழ் நாட்டின் சொத்து! ஒட்டு மொத்த தமிழினத்தின் சொத்து!
மாமன்னன் இராசேந்திர சோழன்
தென்னிந்தியா முதற்கொண்டு தெற்காசியா வரை தன்னுடைய படைபலத்தை கொண்டு அகண்ட தமிழர் ஆட்சியை நிறுவி இந்நிலங்களை எல்லாம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறி ஆயிரம் ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. சோழனின் பெருமைமிக்க வரலாற்றை தமிழர்கள் நினைவு கூரும் இவ்வேளையில் நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியது நம் கடமையாகும்.
சேர சோழ பாண்டியர்கள் ஆண்டுவந்த நம் தமிழ் மண்ணை அந்நியர்கள் இப்போது ஆட்சி செய்து வருகின்றனர் . நமக்கு தொடர்பே இல்லாத 'இந்தி'யர்களும், நம்மோடு ஒட்டி உறவாடும் திராவிடர்களும் தான் இப்போது தமிழர்களை ஆட்சி செய்து கொண்டு வருகிறார்கள். இவர்களின் பிடியில் இருந்து தமிழ் மண்ணை, தமிழ் மக்களை முற்றிலும் மீட்கும் நடவடிக்கையை தமிழர்கள் நாம் மேற்கொள்ள வேண்டும்.
நம் இனத்தை நாசாமாக்கி , நம் மண்ணை மலடாக்கி, நம் மொழியை அழிவின் விளிம்புக்கு கொண்டு சென்ற அந்நியர்களின் ஆதிக்கத்தை தமிழர்கள் உடைத்தெறிவோம். நம் இனம் , நம் மண், நம் மொழி ஆகிய மூன்று முக்கிய கூறுகளையும் தமிழ்த் தேசிய மக்கள் என்றும் காப்போம் என்று இராசேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டில் சூளுரைப்போம் !!
வாழ்க தமிழ் ! வளர்க தமிழினம் ! சுடர்க தமிழ்நாடே
இராச்சுகுமார் பழனிச்சாமி
வந்தாரை வாழ வைத்து பார்த்த தமிழர்களையே பஞ்சம் பிழைக்க வந்த வேற்றினத்தோர் பின்னாளில் அவர்கள் தமிழர் இல்லை என்பதும் தமிழரை இரண்டாம் நிலைக்கு தள்ளுவதும் அன்னை தமிழை சிதைத்து தமது மொழியை எமக்குள் திணிப்பதும் இன்று நேற்று அல்ல திருவள்ளுவர் காலத்தில் இருந்து நடந்துள்ளது.
அந்த வகையில் இப்போ தெலுங்கரும் , கன்னடர்களும் கரிகாலன், ராசராசன் போன்ற சோழ தமிழ் மன்னர்களை தெலுங்கர்கள் என்றும், மூவேந்தர் வ வந்த குடி தம் போல் வந்தேறு குடிகளே என கூறி வரலாற்றை திரிக்க முனைகின்றன. இதில் விந்தை எதுவும் இல்லை.
தமிழினம் வலிமை கொண்டு எழுகின்ற காலங்களில் எல்லாம் இத்தகையை புனைவு புலவர்கள் எழுவார்கள்.... அவர்கள் பணியே எம் வரலாற்றை திரித்து எம் இனத்தை இழிவாக்கி பேசுவதும் எழுதுவதும்..
இந்த வந்தேறு குடிகளுக்கு பண்டை புகழ் இலக்கியங்களும் இல்லை. மொழி, இன வரலாறும் இல்லை. இவர்கள் எங்கள் முன்னை தமிழ் மாந்தரை தமது குடி என்பது நகைப்பிற்குரியதே. தமிழர்களின் வரலாறு கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கும் முந்தியதாக இருப்பது அறிந்தும் வரலாறு தெரியாத மட மாந்தர் என தமிழரை மதித்து இன்று இப்படி எம் சோழ மன்னர்களை தெலுங்கர் என புனைவதை மன்னிக்க முடியாது. அனுமதிக்கவும் முடியாது..
தெலுங்கு மொழி வரலாறு சில நூறு ஆண்டுகளே... ஆனால் தமிழ் மொழி வரலாறும் இந்த மன்னர்கள வரலாறும் ஆயிரமாயிர ஆண்டுகள் கடந்து மிளிர்கின்றன.
தமிழும் கலைகளும் வளர்த்த மன்னர்கள் எப்படி தெலுங்கர்களாக இருந்திருப்பார்கள்? .
தமிழன் கட்டிய கலைவண்ணம் கொண்ட கோவில்கள் கட்டடங்கள் எல்லாவற்றையும் பின்னாளில் தமதாக்கும் சூழ்ச்சி ஆதிக்கங்கள் கொண்டவர்கள் கூற்றே இந்த சோழர் பற்றிய பொய்மை வரலாற்று இன்றைய திரிபுகள்..
எங்கள் மொழியும் எங்கள் வரலாறும் எங்கள் மண்ணும் மங்காத தமிழ் என்று பாடுவோம்! இதை மாற்றிட நினைக்கும் எவரையும் சாடுவோம்.
நினைவு கூறல்
தமிழரின் வீரத்தையும், அறத்தையும், கலையையும் உலகிற்கு பறைசாற்றிய பேரரசன் இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா நேற்று கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப்பட்டது. கி.பி 1014 ஆம் ஆண்டு அரியணை ஏறிய இராஜேந்திர சோழன் ஏறத்தாழ 30 ஆண்டு காலம் சோழ நாட்டை ஆண்ட பெருமை கொண்டவன். அவன் மன்னனாக பதவி வகித்த கடைசி 15 ஆண்டுகள் போருக்கு செல்லாமல் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை நலனுக்காகவும் காவல் அரணாக நின்றான். இந்த காலகட்டத்தில் சோழ நாட்டில் ஏராளமான ஏரிகள், குளங்கள் வெட்டப்பட்டன. அதில் ஒன்று அங்குள்ள சோழகங்கம் ஏரி.
இராஜேந்திரனின் இந்த அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவை ஒட்டுமொத்த தமிழகமே கொண்டாடியிருக்கவேண்டும். ஆனால் எடுத்ததற்கெல்லாம் பரபரப்பை ஏற்படுத்திவரும் முன்னணி தொலைக்காட்சி ஊடகங்களோ, எழுத்தாளர்களோ மற்றும் திரைத்துறையினரோ இவ்விழாவை பற்றி சிந்திக்கவில்லையே என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. அதே சமயம் இதில் விதிவிலக்காக பொதிகை தொலைக்காட்சி இவ்விழாவை ஒளிபரப்பியது மனதிற்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது.
தமிழரின் வீரத்தையும், கலையையும், அறத்தையும் உலகிற்கு சிறப்பாக எடுத்துக்கூறிய சொற்பொழிவாளர்களின் பேச்சை நேரடியாக ஒளிபரப்பி சிறப்பித்தது பொதிகை தொலைக்காட்சி. இவ்விழாவில் சோழர் பரம்பரையின் வரலாற்றை உயிருடன் நமக்கு கண் முன் காட்டிவரும் எழுத்தாளர் பாலகுமாரன் கலந்துகொண்டது சிறப்பாக அமைந்திருந்தது.
இவ்விழாவிற்காக தஞ்சை பெரிய கோவிலில் இருந்து 1000 இரு சக்கர வாகனங்களில் ஜோதி ஏந்திய இளைஞர்கள் கங்கை கொண்ட சோழபுரம் வந்ததும், தஞ்சை கோவிலில் இந்த பயணத்தை பாலகுமாரன் தொடங்கி வைத்ததும் மிகவும் சிறப்பாக இருந்தது. மாலையில் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் இராஜந்திரன் அரியணை ஏறிய 1000ஆவது ஆண்டு நினைவாக 1000 விளக்குகள் ஏற்பட்டன.
நாட்டிற்கே முன்னுதாரணமாக பஞ்சாயத்து ஆட்சி முறையை கொண்டு வந்தவன் இராஜேந்திர சோழன். ஆனால் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு பஞ்சாயத்து நிர்வாகமும் இராஜேந்திரனுக்கான விழாவை நடத்தவில்லை. வரலாற்றை மறந்தவர்களாக பஞ்சாயத்து நிர்வாகத்தினர் உள்ளது தான் இதற்கு காரணம்.
சரி பஞ்சாயத்துகள் இப்படி இருந்தது என்றால், தொலைக்காட்சிகளும் தூங்கிக்கொண்டிருப்பது தான் எப்படி என்று தெரியவில்லை. வார நாட்களில் நாடகம், வார இறுதி நாட்களில் திரைப்படம் போன்றவைகளுக்கு தரும் முக்கியத்துவத்தை தமிழரின் வரலாற்று நிகழ்வான இராஜேந்திரன் அரியணை ஏறிய 1000ஆவது ஆண்டு விழாவிற்கும் தந்திருக்க வேண்டும் அல்லவா?
நாள் முழுவதும் நமது வீரத்தின் மாண்பையும், அறத்தின் கூற்றையும், வாழ்வியல் நடைமுறைக்கான முன்னேற்பாடுகள் பற்றியல்லவா நேற்றைய நாள் முழுவதும் ஒவ்வொரு ஊடகமும் கொண்டாடியிருக்கவேண்டும். ஏன் அப்படி செய்யவில்லை? பரபரப்பு ஒன்றையே குறிக்கோளாக ஏற்று செயல்படும் ஊடகங்கள் இனியாவது தமிழர் பரம்பரைக்கு உரிய முக்கியத்துவத்தை தரவேண்டும். ஏனென்றால் மக்களுக்கு அழிவுப் பாதையை காண்பிப்பதை விட ஆக்கப்பூர்வமான பாதையை காண்பிப்பது ஊடகத்தின் கடமையாகும்.
தொலைக்காட்சிகள் தான் இப்படி என்றால் எழுத்தாளர்கள் சமூகமும் இவ்விழாவை சிறப்பாக நடத்த முயற்சிக்கவில்லை. திருமணத்தின் மாண்பையே குலைக்கும் வகையில் விவாகரத்து வாங்குவதில் தவறில்லை என்று வாதாடும் எழுத்தாளர்கள் உள்ள நாட்டில் எப்படி தமிழரின் சரித்திரத்தை சிறப்பிக்க நேரமிருக்கும்?
திரைத்துறையினரும் கூட இவ்விஷயத்தில் சோடை போனது வருத்தத்தை அளிக்கிறது. திரையுலகையும், மக்களையும் புதிய பாதையில் அழைத்துச்செல்லும் ராம், சமுத்திரக்கனி, ஜெனநாதன், பாலா போன்றவர்களாவது தமிழரின் சரித்திரம் இராஜேந்திரனின் அரியணை ஏறிய விழாவை கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் அவர்களே இவ்விழாவை மறந்தது மிகப்பெரிய தவறு என்று தான் தோன்றுகிறது.
இத்தருணத்தில் மெய் சிலிர்க்கக்கூடிய வகையில் கட்டடக் கலையையும் சிற்பக்கலையையும் பிரம்மாண்டமான உருவத்தில் வடித்த சிறப்புமிக்க இக்கோயிலை உலக மரபுச்சின்னமாக மாற்ற பெருமுயற்சி செய்த தொல்லியல் துறை ஆலோசகர் கே.டி.நரசிம்மன், யுனெஸ்கோவில் இதற்காக வாதாடிய கோபாலஸ்வாமி ஆகியோரை மிகவும் பாராட்டவேண்டும். இந்த சிறப்புமிக்க முயற்சிக்கும், நேற்று நடைபெற்ற இராஜேந்திரனின் 1000ஆவது அரியணை விழாவை நடத்த மிகவும் உறுதுணையாக இருந்த ஒருங்கிணைப்பாளர் கோமகனுக்கும் நன்றி கூறுவோம்.
இவ்விழாவில் பாலகுமாரன் ஆற்றிய உரையின் இறுதி பகுதியை மட்டும் பகிர்ந்துகொள்வோம். குழந்தைகளுக்கு தமிழ் பேச கற்றுக்கொடுங்கள், எழுத கற்றுக்கொடுங்கள், ஆனால் மறவாமல் தமிழ் வரலாற்றை கற்றுக்கொடுங்கள் என்று அவர் கூறியதை அனைவரும் கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களிலாவது
அனைத்து மக்களும் இராஜேந்திரன் அரியணை ஏறிய விழாவை கொண்டாடவேண்டும் என்பதே நமது விருப்பமாகும்.
நன்றி தமிழ் ஊடகங்கள்
ஊர்களின் பண்டைய பெயர்கள்
சில ஊர்களின் முழுமையான & மிக பழைய பெயர்கள் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்காக.
தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது
பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது
வென்கல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது
செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு என்று தற்போது வழங்கப்படுகிறது
எருமையூர் என்ற தமிழ் பெயர் தான் இன்று மைசூர் என்று அழைக்கப்படுகிறது ,எருமை என்பதை வடமொழியில் மகிசம் என்று சொல்வார்கள்.எனவே தமிழ் பெயரை எடுத்துவிட்டு மகிசூர் என்று மாற்றி பின்னது அது மைசூர் என்றானது
குவளாலபுரம் என்பதே மாறுபாடு அடைந்து கோலார்(தங்க வயல்) என்று அழைக்கப்படுகிறது
உதகமண்டலம் அதாவது ஊட்டி தானுங்க அதன் தொடக்க கால பெயர் என்ன தெரியுமா?
ஒத்தை கால் மண்டபம்,ஒத்தை கால் மாந்தை இந்த பெயர்தான் உதகமண்டலம் என்று மாறியுள்ளது
ஒகேநக்கலின் உண்மையான பெயர் உகுநீர்க்கல்,புகைநற்கல் என்பதேயாகும்
விருதாச்சலம்(வடமொழி) என்ற ஊரின் உண்மையான பெயர் முதுகுன்றம்(தமிழ்) என்பதே
வேதாரண்யம் என்ற ஊரின் உண்மையான பெயர் ""திருமறைக்காடு""
வேதாரண்யம் என்பது தமிழ் சொல் அல்ல
தி. நகர் என்பது " தியாகராய நகர்" ஆகும் இதை அனைவரும் அறிந்ததே ,இவர் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் ஆவார்
கே.கே நகர் என்பது "கலைஞர் கருணாநிதி நகர்" ஆகும்
பாண்டிபசார் என்பதன் உண்மையான பெயர் "சவுந்தரபாண்டியனார் அங்காடி" என்பதே .அய்யா சவுந்தரபாண்டியனும்
நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
மதுரை என்பது மதிரை என்ற சொல்லில் இருந்து வந்தது
மதி என்றால் நிலவு , பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள் அதான் மதுரை என்று பெயரிட்டனர்,
குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான் வடமதுரை அதாவது இன்றைய மதுரை
திண்டிவனம் என்பதன் உண்மையான பெயர் புளியங்காடு என்பதாகும்
நீலகிரி என்னும் மலையில் இப்பொழுது குன்னூர் என வழங்குவது குன்றூரேயாகும்
நெல்லை நாட்டில் பொதிய மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய ஊர் ஒன்று, சிவசைலம் என்று பெயர் பெற்றுள்ளது.
வானமா மலை என்னும் நாங்குனேரிக்குத் தோத்தாத்திரி என்ற வடமொழிப் பெயரும் உண்டு.
தமிழ்நாட்டில் ஆர்க்காடும், ஆலங்காடும், வேற்காடும், களங்காடும், பிற காடுகளும் இருந்தன என்பது ஊர்ப் பெயர்களால் விளங்கும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும். ஆத்தி மாலை அணிந்த சோழ மன்னனை ‘ஆரங்கண்ணிச் சோழன்’ என்று சிலப்பதிகாரப் பதிகம் குறிக்கின்றது. அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது.
மலையின் முடியைக் கோடு என்னும் சொல் குறிப்பதாகும். சேலம் நாட்டிலுள்ள திருச்செங்கோடு சாலப்பழமை வாய்ந்தது.
“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்”
என்று சிலப்பதிகாரம் கூறுதலால் திருச்செங்கோடு முருகனுக்குரிய பழம் பதிகளுள் ஒன்றென்பது இனிது விளங்கும். செந்நிறம் வாய்ந்த மலையின் சிகரம் செங்கோடு என்று பெயர் பெற்றதென்பர்
ஏர்க்காடு
சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று அவ்வூருக்குப் பெயரிட்டார்கள். அது சிதைந்து ஏர்க்காடு என வழங்குகின்றது.
திருகோணமலை
இறையனார் களவியலுரையில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் கொலு வீற்றிருந்த காலத்தில் பாண்டியரின் தலைநகராக இருந்த ‘கபாடபுரம்' என்று குறிக்கப் பெறுவது இன்றும் தமிழீழத்தில் உள்ள இயற்கைத் துறைமுக நகரான திருகோணமலைதான் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குடிதனைப் பெருக்கிக்
கொடிதனை நெருக்கி வாழும்
கோணமாமலை....
என்று தேவாரப் பாடல் திருகோண மலையைச் சிறப்பிப்பதும் இதை உறுதிப்படுத்தும்.
விருத்தாசலம் என்ற பெயரை தமிழில் மொழிபெயர்த்து "முதுகுன்றம்" ஆக்கிவிட்டார்கள். உண்மையான பெயர் "பழமலை".அங்கு குடிகொண்டுள்ள இறைவன் பெயர் பழமலைநாதர்.
தமிழறிஞர் பேராசிரியர் நன்னன் அவர்கள் வேடிக்கையாக "பழமலை" , "கிழமலை" ஆயிற்று என்று கூறுவார்.
"இலங்கையின் கிழக்குப் பகுதியின் எல்லை காலத்துக்குக்காலம் மாறுபட்ட போதிலும் திருக்கோணமலை (தட்சணாபதி), அதன் வடக்கு ஹோரவப்போத்தனை (உறவுப்பெற்றானை) , இந்தியாவின் வாடா நாட்டிலிருந்து படையெடுத்து வந்த ஆரிய அரசர்களை மட்டக்களப்பு மன்னன் சிங்ககுமாரன் கலி-3370 இல் எதிர்த்து வடக்கே திருக்கோணமலைக்கப்பால் துரத்தி எல்லைக்கல்லிட்ட இடத்தில் அவர்கள் சிங்ககுமாரனிடம் சமாதானம் கோரி இவனுரவைப் பெற்றதனால் அவ்விடத்திற்கு உறவுப்பெற்றானை என பெயர் சூட்டினான். "
-மட்டக்களப்புத் தமிழகம் (இயல் 9 பக் 412 ) -
(வி.சி.கந்தையா ,1964)
(முன்னாள் சிவானந்த வித்தியாலய ஆசிரியர்)
(அதுவே கால ஓட்டத்தில் மருவி ஹொரவப்பொத்தான என்றாகி இன்று தமிழர் வரலாற்றுக்கும் அவ்வூருக்கும் தொடர்பற்றது என்றாகி விட்டது. வடக்கு, கிழக்கை பிரித்தாழும் இனவாதத்தின் தூர நோக்கு செயற்பாட்டில் ஆரம்ப பிரதேசம் ஹொரவப்பொத்தான தொடங்கி மணலாறு ஊடாக வெற்றிகரமாக நகர்கின்றது.)
தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாரை " பிரகதீஸ்வரர்" என்றும் , முதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலை நாதரை " விருத்தகிரீஸ்வரர்" என்றும் மாற்றியுள்ளனர்.
https://www.facebook.com/photo.php?fbid=10152383010719865&set=p.10152383010719865&type=1
தமிழர் கப்பற்கலை
1933 இல் யாழ்ப்பாணத்தின் துறைமுகங்களின் ஒன்றான வல்வெட்டித்துறையில் இருந்து அன்னபூரணி என்னும் 133 அடி நீளமான பாய்க்கப்பல் பயணம் மேற்கொண்டு, வெற்றிகரமாக அட்லாண்டிக் கடலை கடந்து அமெரிக்கத் துறைமுகமான மசச்சூசெட்ஸ் இனை வந்தடைந்தது. இப்பாய்க் கப்பலானது யாழ்ப்பாணத்தில் கிடைக்கும் மரங்களைக் கொண்டு உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டது.
தமிழர் கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது
ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின் ஈடுபாட்டைக் குறிக்கின்றது. தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். இத்துறை வல்லுனர்கள் கம்மியர் எனப்பட்டனர். “தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்” என்ற கடலோடி நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றில் இருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம்.
நன்றி: விக்கிபீடியா இணையம்
கடையெழு வள்ளல்கள்
சங்க காலத்தில் மன்னர் பலர் வள்ளல்களாக
இருந்திருக்கின்றனர் . அவர்களுள் மிக சிறப்பு வாயிந்த வள்ளல்கள் எழுவர் . இவர்களை கடை ஏழு வள்ளல்கள் என்றும் அழைப்பர் .
***1.பேகன் ***
இவன் பழனி மலை பகுதியில் வாழும் ஆவியர் குடியைச் சேர்ந்த மக்களின் தலைவன் .
மழை பொழியும் மலை சாரல் பாதையில் சென்றுக் கொண்டு இருந்தபோது கருமே
கங்களை க் கண்டு ஆடி கொண்டிருந்த மயில் ,குளிரில் நடுங்குவதாக எண்ணி தன போர்வையை அதன் மீது போர்த்தி விட்டவன்
இதனால் இவனை மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல் பேகன் என அழைக்க பட்டன் .
***2.பாரி வள்ளல் ***
இவன் பறம்பு மலை பகுதியை ஆண்ட மன்னன் .இவன் பறம்பு மலை பகுதியைச் சேர்ந்த நாகமலைப் பாதையில் சென்று கொண்டிருந்த பொழுது படர்வதுக்கு பற்றுக் கோடு இல்லாமல் ஆடி கொண்டிருந்த முல்லைக் கொடி படர்வதற்காகத்
தன தேரையே கொடியருகில் நிறுத்தி விட்டுச் சென்றவன்.
ஆகவே இவனை முல்லைக்குத் தேர் ஈந்த பாரி என பெயர் பெற்றான் .
அவ்வையார் கூட இந்த வள்ளலை பாராட்டி சங்க பாடலொன்று பாடியுள்ளார்
***3*வள்ளல் காரி *****
இம்மன்னன் தன கையில் உள்ள வாள் வீச்சில்
பகைவர்களை வெட்டிவீழ்த்துவதைப் பொழுதுப் போக்காக கொண்டிருந்தான் அதனால் இவன் வாள் என்றும் செந்நிறம் கொண்டு ஒளிரும்
ஆனால் இவனோ தன்னைத் தேடி வந்து கேட்டவர்களுக்கு வெண் மயிர் பிடரிக் குதிரைகளை ப் பரிசாக வழங்கினான்
அப்போது அவன் பேசும் அன்பு மொழிகள் விதை முளைக்க உதவும் ஈர நிலம் போன்றவை
வேல் சிவப்பில் வீரமும் ,கைசிவப்பில் ஈரமும்
கொண்டவன் என்று நல்லூர் நத்தத்தனார்
சிருபானாற்றுப் படையில் பாடியுள்ளார் .
**4*ஆய்***
இவன் பொதியமலைப் பகுதியில் உள்ள மலைப்பகுதிகளையும் நிலப்பகுதுகளையும் ஆண்டு வந்த குறுநில மன்னன் .
இவன்ன்மகிழ்ந்திருக்கும் போது மார்பில் சந்தானம் பூசிய கோலத்தோடு காட்சித் தருவான்
சினந்திருக்கும் போது வில்லும் அம்பும் கையுமாக திரிபவன்.
எவருக்கும் கிடைத்தற்கரிய நீல நாகத்தின் உடையை குற்றாலத்தில் உள்ள தென்முகக்கடவுள் சிலை ஆடை இல்லாமளிருப்பதைக் கண்டு அச் சிலைக்கு போர்த்தி மகிழ்ந்தான் . மேலும் பொருள் வேண்டி வருவோர்க்கு இல்லை எனாது பொருள் வழங்கினான் .இவனைத் திண் தோள் ஆர்வ நன்மொழி ஆய் ! எனப் போற்றினர் .
***5*அதியமான் **
தகடூர் நாட்டை ஆண்டுவந்தவன் அதியமான் ,இவன் தன ஆட்சிக் காலத்தின் பெரும் பகுதியை
போரிலேயே கழித்துல்லான் என்பதை இவன் வரலாற்றைப் படித்தால் விளங்கும் . வேல் வீச்சில் இவனை வெல்ல யாரும் கிடையாது பெரும்
சினக்காரன் . பூஞ்சாரல் மழைப் பகுதியில் பழுத்திருந்த அரிய நெல்லிக்கனி ஒன்று இவனுக்குக் கிடைத்தது .
அது சாவமையைத் தரும் அமுதம் போன்றது .
அதனைத் தான் உண்ணாமல் அவ்வைக்குக்
கொடுத்து நீண்ட நாள் உயிர் வாழச் செய்தான்
இதனால் அவ்வைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான்
என எல்லோராலும் போற்றப்பட்டான்.
*****6*நள்ளி*****
இவன் நெடுங்கோடு மலை முகடு என்கின்ற
மலைப்பகுதி தற்போது உதகை என்று அழைக்கப்படுகிறது .இந்தமளைப்பகுதியின் தலைவன்
இவன் போர் முனையில் எப்படி கைகள் முன்னால்
நிற்குமோ அதுபோல் மலை வழ மக்களின் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துப் பொருள்களையும் வழங்கிப்ப் புகழ்பெற்றவன் !!
****7 ஓரி ***
மலை நாட்டைச் சேர்ந்த வல் வில் ஓரி போர்முனையில் வெற்றிபெற்று புகழுடன் விளங்கியவன் காரி குதிரையில் வந்து போரிட்ட போது அவனைப் போரில் வென்று முடிவில் காரியின் குறும் பறை நாட்டைத் தனது போர்
வெற்றியினைப் புகழ்ந்து பாடிய யாழ் மீட்டும் பாணர்களுக்கு ப் பரிசாக வழங்கி பெரும் வள்ளல் எனப் போற்றப்பட்டான் .
ஆதாரம் சிறுபாணாற்றுப்படை
திருக்குறள் தகவல்கள்
திருக்குறள் பற்றிய முதல் அச்சிட்ட நூல்
திருவள்ளுவர் கடல் திரட்டு அல்லது அறிவுக்கடல்
1794 தொகுத்தவர் கிண்டர்ச்லி - லண்டன்
அறத்துப்பாலை மட்டும் அச்சிட்டு வெளியிட்டவர்
எப்.டபிள்யு எல்லிஸ் 1812
திருக்குறள் மூலத்துடன் ஆங்கில மொழிபெயர்ப்புக் குறிப்புடன் 304பக்கம் புத்தகம் வெளியானது
திருக்குறள்
லத்தினில் 1730
பிரெஞ்ச்சில் 1767
தெலுங்கில் 1887
சமஸ்கிருதத்தில் 1922
ஹிந்தியில் 1924
மலையாளத்தில் 1915
மலையாளத்தில் திரு சந்திரசேகர் நாயர் 2000இல்
ஹிந்தியில் த.இ.ச..ராகவன் 1978 மொழிபெயர்த்துள்ளார்
https://www.facebook.com/photo.php?fbid=10154265771385012&set=a.10154178193940012.1073741902.801515011&type=3&permPage=1
Thursday, October 16, 2014
தமிழரின் விளையாட்டுக்கள்
தமிழர்களுக்கென்று தனித்துவமான விளையாட்டுகள் இருந்தன என்பதே மெல்ல மெல்ல தமிழர்களுக்கே மறந்து வருகிறது.
ஆங்கிலேயரின் ஆட்சி முறையினால் தமிழகத்திலும் தமிழர் சார்ந்த நிலங்களிலும் ஆங்கில விளையாட்டுகள் மேன்மை அடைந்து தமிழர் விளையாட்டுகள் கிராம விளையாட்டுகளாகத் தள்ளப்பட்டன. கிராமங்களிலும் அவை வலுவிழந்து தள்ளப்பட்டன.
அவை ஆண்களுக்கான சல்லிக்கட்டு, பாரி வேட்டை, சிலம்பம், சடுகுடு, ஓட்டம், இளவட்டக்கல், உரிமரம் ஏறுதல், வண்டி ஓட்டம், ஆடுபுலி ஆட்டம், மல், வில் பெண்களுக்கான தாயம் பல்லாங்குழி, தட்டாங்கல், நொண்டியாட்டம், கண்ணாமூச்சி, உயிர்மூச்சு, கிச்சு கிச்சு தாம்பலம், ஊஞ்சல் எனச் சொல்லலாம்.
நேற்றுவரை கிராமப்புறத் தெருக்களில் இருந்த தட்டாங்கல், நொண்டியாட்டம், கண்ணாமூச்சி என்பனவற்றை இன்று காண வில்லை.
அதற்குக் காரணம் நகர்ப்புறக் காற்றில் கலந்துவிட்ட அந்நியக் கலாசாரமேயாகும். கண் மூடித்தனமான ஆங்கில வழிக்கல்வியுடன் கூடிய நாகரிகம், கிராமத்துத் தமிழ்மரபுகளை இன்று எல்லாத் துறைகளிலும் அழித்து வருகிறது. ஆங்கிலம் சார்ந்த விளையாட்டு வேண்டாம் என்பது என் கருத்தல்ல. தமிழரின் விளையாட்டும் இருக்கட்டுமே. உலகெங்கும் வாழ்கிற எட்டு கோடிக்கு மேற்பட்ட தமிழர்கள் தனித்தன்மையுடன் கூடிய தமிழர் விளையாட்டை முன் னெடுக்க முடியாதா என்ன?
தமிழர் சுய அடை யாளத்தைப் பறிகொடுத்து இன்னோர் இனத்தின் அடையாளத்தைச் சுமக்க வேண்டுமா?
தமிழரின் விளையாட்டுகளைப் புறக்கணிப்பது நம்மை நாமே புறக்கணிப்பதற்குச் சமமானது.
சங்க காலத்தில் விளையாட்டை வினைத் தொழிலாகக் கொண்ட ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். கடுவன் இள மள்ளனார், கருவன் மள்ளனார், ஞாழார் மகனார் மள்ளனார், மள்ளனார் ஆகிய நான்கு புலவர்களின் பெயர்கள், மள்ளன் என்னும் பெயரைக் கொண்டு முடிகின்றன. இவர்கள் மள்ளற் கலையைக் கற்பிக்கும் குடும்பத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
ஆகவே அக்காலத்தில் இயற்றமிழிலும் உடல்பயிற்சிக் கலையிலும் வல்லவர்கள் இருந்திருக்க வேண்டும்.
தற்காலத்தில் உடல்பயிற்சி நிலையங்கள் இருப்பதைப் போல் சங்க காலத்தில் இருந்த தற்கான சான்றுகளாக போரவை, முரண்களரி போன்ற சொற்கள் பயிற்சிக் கூடங்களுக்காக இருந்திருக்கின்றன. பட்டினப் பாலையில் 'முரண்களரி' என்பது பயிற்சிக்கூடமே.
இன்றைக்குக் களரி என்ற சொல், கேரளாவில் இருக்கிறது. களரிப் பணிக்கர் என்பது உடல்பயிற்சிக் கலையைக் கற்பிக்கும் ஆசிரியரே. களரிஎன்றசொல்இராமநாதபுரம்,மதுரை,மற்றும்தென்மாவட்டங்களில்உள்ளது.
சங்க கால இலக்கியக் குறிப்புப்படி 37-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இருந்துள்ளன. அவற்றுள் சிலவற்றை மட்டும் விரிவாகக் காணலாம்.
1)ஊசல் எனும் ஊசலாட்டம் :
இது இப்போது ஊஞ்சல் எனப்படுகிறது. மரக்கிளைகளில் அல்லது வீடுகளில் உயர் விட்டங்களில் கயிறுகளால், கொடிகளின் தண்டுகளால் ஊஞ்சல் கட்டி அதில் அமர்ந்து ஆடி மகிழ்தல் ஆகும். இதில் பெரும்பாலும் பெண்களே பங்கேற்பர். சங்க காலத்தில் தலைவியை ஊஞ்சலில் வைத்து ஆடியவாறு பாடியதாகக் குறிப்புகள் இருக்கின்றன.
2)ஒரையாடல்:
மகளிர் ஆடும் ஒரு வகை விளையாட்டு, நண்டு, ஆமை என்பனவற்றைச் சிறு கோல் கொண்டு அலைத்து விளையாடும் விளையாட்டே ஒரையாடல் ஆகும். இன்றும் கடற்கரை, நதிக்கரை, குளக்கரை ஆகிய பகுதிகளில் சிறுவர்கள் ஊர்ந்து திரியும் சில பூச்சிகளைக் கோல் கொண்டு அலைத்து ஆடி மகிழ்வர்.
3)ஏறுகோள்
இது ஆடவரின் வீர விளையாட்டு. கூரிய கொம்புகளை உடைய எருதுகளை ஆயுதம் ஏதுமின்றித் தம் உடல் வலிமையால் இளைஞர்கள் அடக்குவர். இதுபற்றிக் கலித்தொகை, சிலப்பதி காரம் போன்ற நூல்களில் சொல்லப்படுகிறது. இதுவே இன்று சல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருதுக்கட்டு என உருமாறித் தற்காலத்தில் நிகழ்ந்து வருகிறது.
4)குதிரை ஏற்றமும் யானை ஏற்றமும் :
குதிரை, யானை மூலம் ஓடுவது, அசைவது போன்ற விளையாட்டு. குதிரை ஓட்டமும் இதன் வழியே வந்ததுதான். இதுவும் பழங்கால விளையாட்டே!
5)சிறுதேர்:
தேரினை உருட்டியும் இழுத்தும் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு. இதற்கு உருள், சகடம், தேர் எனப் பெயரிட்டு அழைத்தனர். கிராமங்களில் தென்னை மரங்களிலிருந்து விழும் பிஞ்சு இளநீர்க் காய்களின் மூலம் தேர் செய்து விளையாடுவர்.
6)நீர்விளையாடல்:
நீரிலே விளையாடுவது, நீச்சலடிப்பது, உயரமான இடத்திலிருந்து குதிப்பது, பட கோட்டுவது என்பன நீர் விளையாட்டு. இதனைப் 'புனலாடல்' என்பர். தமிழில் சங்க இலக்கியங் களிலும் சிற்றிலக்கியங்களிலும் இவ்விளையாட்டு, மிகச் சிறப்பான இடம் பெற்றுள்ளது.
7)பந்து:
பந்தெற்களம், பந்தடி மேடை இருந்த விபரங்களை சங்க இலக்கியங்கள் சான்று கூறுகின்றன. பந்து என்றே சங்க இலக்கியம் விளக்குகிறது. பந்துகளைப் பஞ்சடைப் பந்து, செம்பொன் செய்த வரிப்பந்து, பூப்பந்து என்ற வகைகள் இருப்பதாக அதன் மூலம் தெரிகின்றது. இருபத்தொரு பந்துகளைப் பயன்படுத்தி 'எண்ணாயிரம் கை' பந்தடித்த மானணீகை என்ற பெண்ணைச் சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது.
8)கழங்காடுதல்:
மகளிர் விளையாட்டுகளில் கழங்காடுதல் ஒருவகை. இதைச் சுட்டிப் பிடித்தல் என்றும் வழங்குவர். வீடுகளின் திண்ணைகளில் அல்லது சற்று மேடான பகுதிகளில் 'கழங்கினை' வைத்து (கழங்கு - சூது, கழற்சி விளையாட்டு, கழற்சிக்காய்) ஆடுவர். பொன்னாலான கழங்கினை வைத்துத் திண்ணைகளில் ஆடிய செய்தி, புறநாநூற்றிலும் பெரும்பாணாற்றுப்படையிலும் சொல்லப் படுகிறது. இப்பொழுது கழங்கிற்குப் பதில், சிறிய உருளை வடிவக் கற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
9)வட்டாடல்:
பண்டைத் தமிழர் விளையாட்டுகளில் சிறப்புற்றிருந்த ஒன்று வட்டாடுதல். (வட்டாடல்-வட்டை உருட்டிச் சூதாடுதல்) இதற்காக அரங்கம் இழைத்துக் காய்களை நகர்த்தி விளையாடும் இவ்வகை ஆட்டம், ஒருவகைச் சூதாட்டத்தை ஒத்தது. கல்லாத சிறுவர்கள் வேப்ப மரத்து நிழலில் வட்டரங்கிழைத்து நெல்லிக்காயை வட்டாகக் கொண்டு ஆடிய செய்தியை நற்றிணையில் காணலாம்.
காமெரூனில் தமிழ் மொழி
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள காமெரூன் பழங்குடி மக்கள் பேசிக்கொண்டு இருக்கிற மொழி தமிழ் என்பது அவர்களின் பேசுவதிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிவது இந்த ஆய்வறிக்கையில் நிருபனமாகியுள்ளது.
தமிழின் தாக்கம் அவர்களின் பேச்சு வழக்கில் இன்றும் அப்படியே இருக்கிறது.
... மேலும் எரித்திரியா, சூடான், எத்தியோப்பியா என்பவை நாடுகளின் பெயர்கள் வெப்பத்தை குறிக்கும் தமிழ் பெயர்கள் என்பதை ஆதாரத்தோடு இந்த ஆய்வறிக்கை வெளிச்சத்திற்கு கொண்டுள்ளது..
ஆப்பிரிக்கர்களின் எழுத்துமுறையான தமசைட் (Tamazit) தமிழ் மொழியை குறிக்கிறது.
Wednesday, October 15, 2014
அங்கோர் வாட்
உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் கம்போடியா நாட்டில் உள்ள “அங்கோர் வாட்” ஆகும். உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். இதை கட்டியது ஒரு தமிழ் மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். ஆம் அவர்தான் இரண்டாம் “சூரியவர்மன்”. ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன் ”இந்த ஆலயத்தை கட்டினார்.
இந்த கோவிலானது சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றாது. இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவரே சுமார் 3.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது என்றால் அதன் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.
ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் “கம்போடியா” நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய “அங்கோர் வாட்” கோயில்.
பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சூரியவர்மனால் துவங்கப்பட்ட இதன் கட்டிட பணிகளானது 27 வருடங்களில் நிறைவு பெற்றது. கட்டி முடித்த சிறிது காலத்திலேயே இரண்டாம் சூரியவர்மன் இறந்தார்.
பின்பு ஆறாம் “ஜெயவர்மன்” ஆட்சிக்கு வந்த பிறகு “புத்த” கோயிலாக மாறிய இந்த ஆலயம் இன்று வரை புத்த ஆலயமாகவே விளங்கிவருகிறது.
அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்த கோவில் அமைந்திருப்பதினால் பதினாறாம் நூற்றாண்டுகளில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைந்தது. பிறகு ஒரு போர்சுகீசிய துறவியினால் மீண்டும் வெளியுலகிற்கு வந்தது.
இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய நாட்டு அரசு கம்போடிய தேயக்கொடியில் தேசிய சின்னமாக “அங்கோர் வாட்” ஐ பொறித்துள்ளது. எந்த ஒரு காமிராவிலும் இந்த ஆலயத்தை முழுமையாக படம் பிடிக்க முடியாது. மேலே உள்ள புகைப்படமானது பூமியில் இருந்து 1000 அடி மேலே வானத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
இரண்டாம் “சூர்யவர்மன்” இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!
இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!
இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட “சூர்யவர்மன்” இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் “ஜெயவர்மன்” கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக “புத்த” வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.
பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத் தொடங்கியது. பின்னர் 1586 ஆம் ஆண்டு “António da Madalena” என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் “It is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of.” என்று கூறியுள்ளார்.
பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!!
பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!
இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு “கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் “தேசிய சின்னமாக”ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.
இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!
இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.
கம்போடியாவில் வாழும் யாருக்கும் அதைக் கட்டியவன் தமிழ் மன்னன் என்றும் 12 நூற்றாண்டுகள் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்தனர் என்பதும் தெரியவில்லை.
தமிழரின் சிற்பக் கலை
கல்லிலே கை வண்ணம் கண்டவன் தமிழன். தமிழரின் சிற்பக் கலை சிறப்புக்கள் பற்றி பல்வேறு வியக்கத்தக்க வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. சில சில துளிகளாக அவற்றை தேடி கண்டு கொள்வோம்.
இந்த சிற்பம் தமிழரின் தலை சிறந்த சிற்ப நுட்பங்களில் ஒன்று.
நாம் இன்று பெருமையுடன் தமிழையும் தமிழ் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் அழித்து வரும் வேளையில், 1000 ஆண்டுக்கு முன்னர் தமிழன் செதுக்கிய சிற்பம் தான் இது. ஒரு விரலை விட குறைந்த உயரம். ஒரு கை நீளத்தை விட குறைந்த நீளம்.
தொழில் நுட்ப வளர்ச்சி காணாத அந்த காலத்தில் இப்படி ஒரு அருங்கலை.
தமிழ் நாட்டில் திருச்செங்கோடு என்ற இடத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் இந்த நுட்பமான நுணுக்கமான அழகிய அரும் சிற்பம் உண்டு.
தமிழின் தொன்மை
செம்மொழியாகத் தமிழ் உயர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணம் அதன் தொன்மைத் தன்மையே ஆகும். தமிழினம், தமிழ்மொழி, தமிழ் இலக்கியங்கள் ஆகிய அனைத்தும் மிக்க தொன்மை சார்ந்தவை என்ற கருத்து தற்போது ஆய்வறிஞர்களால் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றது.
குறிப்பாக தமிழின் தொன்மையை தமிழ் இலக்கியங்கள் பலபட பேசுகின்றன. இறையனார் களவியல் உரையில் காட்டப்படும் முச்சங்க வரலாறு தமிழ் இலக்கியக்களத்தின் தொன்மையை எடுத்துரைப்பதாக உள்ளது. கடல் கொண்ட தென்மதுரையில் இருந்த முதற்சங்கம் 4400 ஆண்டுகள் செயல்பட்டதாகவும், கபாடபுரத்தில் இருந்த இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகள் இருந்ததாகவும், மதுரையில் இருந்த முன்றாம் சங்கம் 1850 ஆண்டுகள் இருந்துச் செயல்பட்டதாகவும் இறையனார் களவியல் உரை கருத்துரைக்கின்றது. இந்நூலின் கருத்தின்படி முச்சங்கங்கங்களின் மொத்த செயல்பாட்டுக் காலம் 9950 ஆண்டுகள் என்பது தெரியவருகிறது. ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகள் சங்ககாலமாகக் கொள்ளப்படவேண்டிய நிலை இதன்வழி ஏற்படுகிறது. அறிஞர்கள் கருதுகிற கடைச்சங்க காலமான கி. பி. முன்றாம் நூற்றாண்டிற்கு முன்னதாக பத்து நூறாண்டுகள் சங்கங்கள் இருந்துள்ளன என்ற முடிவிற்கு இதன் வழியாக வரஇயலும். எனவே சங்க இலக்கியத்தின் காலம் என்பது சுமார் கி. மு. ஏழாம் நூற்றாண்டளவில் இருந்துத் தொடங்குவதாகக் கொள்ளலாம். இந்த எல்லை கற்பனை கலந்தது என்று கருதுவாரும் உண்டு. இருப்பினும் இந்நூற்றாண்டளவையே நிலை நிறுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப் பெற்று வருகின்றன என்று அறியும்போது இக்கருத்தின் உண்மை வலுப்பெறுகிறது.
சங்கங்கள் இருந்தமைக்கும், அவை பழமை வாய்ந்தவை என்பதற்கும் உரிய பல இலக்கியக் குறிப்புகள் சங்கப்பாடல்களிலேயே கிடைக்கின்றன.
"ஈரைம் பதின்மரும் பொருது களத்தொழியப் பெருஞ்சோற்றுமிகுபதம் வரையாது கொடுத்தோய் ( புறநானூறு.2)
என்ற பாவடிகள் சேரமன்னனான பெருஞ்சோற்றுஉதியன் சேரலாதனைப் பெருமைப் படுத்த முடிநாகராயர் என்ற புலவரால் பாடப்பட்டதாகும். இவ்வடிகளில் பாண்டவர்கள் ஐவர், கௌரவர்கள் நூற்றுவர் ஆகியோருக்குப் பாரதப்போரின்போது பெருஞ்சோற்றினை மேற்கண்ட அரசன் வழங்கினான் என்று குறிப்பிடப்படுகிறது. இதன்முலம் பாரதம் நிகழ்ந்த காலத்தோடு சங்க இலக்கிய காலம் ஒன்று படுவது தெரியவருகிறது.
இதுபோன்று பல இலக்கியச் சான்றுகள் தமிழின் தொன்மையை எடுத்தியம்பினாலும், சான்றுகளைத் தரும் இலக்கியங்களின் காலம் என்பது ஐயத்திற்கு இடமளிப்பதால் இவை தரும் சான்றுகளை துணைச் சான்றுகளாகவே வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
மேலும் எழுத்துவடிவ இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் தமிழ் வரி வடிவம் என்பது பன்னெடுங்காலமாக பல்வகை மாற்றத்திற்கு உட்பட்டு வளர்ந்து வந்திருப்பதால் இவற்றினைக் கொண்டு பண்டைக்கால வரலாற்றினை உறுதி செய்ய முடிவதில்லை. அதனோடு பண்டைய வரி வடிவத்தையும் உணரமுடியாமல் போய்விடுகின்றது.
இக்குறை நீங்கி உண்மை உணர, உணர்த்தப்பட குகைக்கல்வெட்டுக்கள், நடுகற்கள், பழைய கால நாணயங்கள், கடல் அகழ்வாய்வுகள், அகழ்வாய்வுகள் போன்றன தரும் எழுத்துவடிவச் சான்றுகளைக் கொண்டு தமிழின் தொன்மையை ஆராய அறிஞர்கள் முயல்கின்றனர். இவற்றின் உண்மைத்தன்மை மாறாத நிலைப்புத் தன்மை கொண்டவை என்பதனால் இவை முதன்மைச் சான்றுகளாகக் கொள்ளப்படுகின்றன.
குகைக்கல்வெட்டுக்கள்[தொகு]
தமிழ்நாட்டில் உள்ள தொன்மைவாய்ந்த குகைகளில் காணப்படும் கல்வெட்டுக்களில் இருந்துக் கிடைக்கும் எழுத்துவடிவங்களை ஆராய்ந்து அவற்றின் வழியாக தமிழின் தொன்மையை அறிஞர்கள் உறுதிப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.
ஐராவதம் மகாதேவன் தமிழின் தொன்மையை அறிந்து கொள்ள பண்டைய கால குகைக்கல்வெட்டுக்கள் முன்றினை முன்வைக்கின்றார்.
"குகைக்கல்வெட்டுக்களில் மிகவும் முக்கியமானவை மூன்று. மாங்குளத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனும் (கி. மு. இரண்டாம் நூற்றாண்டு), ஜம்பையில் அதியன் நெடுமான் அஞ்சியும்(கி. பி. முதல் நூற்றாண்டு), புகழுரில் சேரல் இரும்பொறையும் (கி. பி. இரண்டாம் நூற்றாண்டு) வெட்டி வைத்த கல்வெட்டுக்களாகும். இவை சங்ககாலத்தைச் சார்ந்தவை என்று உறுதியாகக் கூறலாம் என்ற அவரின் கருத்து தமிழ்ச்சங்க காலத்தின் கால எல்லையை உறுதிப் படுத்தும் ஆவணமாகும்.
மயிலை சீனி. வேங்கடசாமி ஏறக்குறைய இருபத்தைந்து குகைக் கல்வெட்டுக்களை தமிழின் தொன்மைக்கு முன்வைக்கின்றார். மீனாட்சிபுரம் கல்வெட்டு, திருவாதவூர் கல்வெட்டு, கீழவளவு, கொங்கர் புளியங்குளம், விக்கிரமங்கலம், மேட்டுப்பட்டி, சித்தன்னவாசல், கருங்காலக்குடி, மருகல்தலை, அழகர்மலை, வரிச்சியூர், திருப்பரங்குன்றம்,முத்துப்பட்டி, ஆனைமலை, புகழுர், திருச்சிராப்பள்ளி, குன்றக்குடி, மாமண்டுர், அரசலூர், பிள்ளையார்பட்டி, திருநாதர் குன்றம், கழிஞ்சமலை, ஐயர்மலை, சங்கரமலை, மாலகொண்டாக் கல்வெட்டு போன்ற கல்வெட்டுக்களில் காணப்படும் செய்திகள், மற்றும் எழுத்துவடிவங்கள் போன்றனவற்றைக் கொண்டுத் தமிழின் தொன்மையை மயிலை சீனி . வேங்கடசாமி நிறுவுகின்றார். (மயிலை சீனி. வேங்கடசாமி, சங்ககாலத் தமிழக வரலாறு பக் 4565) இவற்றை அவர் அசோகப் பேரரசர் காலத்திற்கு முன்னது என்றும் உறுதி செய்கின்றார். மேலும் இக்கல்வெட்டுக்களில் காணலாகும் எழுத்து வடிவங்கள் கி. பி. முன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னதாக வடிக்கப்பெற்ற கல்வெட்டுக்களில் இருந்து வேறுபட்டன என்பதையும் அவர் உறுதி செய்கின்றார். இதன் காரணமாக முத்த கல்வெட்டுக்களாக இவை உறுதி செய்யப்படுகின்றன. இக்கல்வெட்டுக்களின் வாயிலாக சங்க காலத்தைய ஊர்ப்பெயர்கள், வணிகக் குழுக்கள், அரசர்கள், மக்கள் பெயர்கள் போன்றன அறியப் பெறுகின்றன. இவற்றின் வாயிலாக சங்க இலக்கிய மரபுகளுடன் இவை ஒத்துப்போவதால் இவை சங்கத்தின் காலத்தை முடிவு செய்ய உதவியுள்ளன என்பது குறிக்கத்தக்கது.
நாணயங்கள்[தொகு]
தொன்மை காலத்து நாணயங்களில் காணப்படும், எழுத்து, உருவ அமைப்புகள் கொண்டும் தமிழின் இருப்பை, தொன்மைக்காலத்தது என்று உணர்த்தமுடிகின்றது. நடன. காசிநாதனின் `தமிழர் காசுஇயல்' என்ற நூல் சங்ககாலம் முதல் தமிழகத்தின் நாணய வளர்ச்சியை எடுத்தியம்புவதாக உள்ளது.
இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள அழகன் குளம் மற்றும் பூம்புகார் ஆகியவற்றில் நிகழ்த்தப்பெற்ற கடலாய்வுகள் வழியாகக் கண்டெடுக்கப் பெற்ற நாணயங்கள் தமிழின் தொன்மையைக் காட்டும் மிகச் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன.
"பூம்புகாரக் காசில் முன்பக்கம் யானையின் உருவமும், பின்பக்கம் புலி வலது காலைத் தூக்கிய நிலையில் உள்ள உருவமும் காணப்படுகிறது. அழகன் குளக் காசுகளில் பெரியதாக உள்ள காசில் முன்பக்கம் யானை மற்றும் எண் மங்கலச் சின்னங்களும் பின்பக்கம் மீன் உருவம் போன்றும் உள்ளன.(நடன. காசிநாதன், தமிழர் காசுஇயல்.ப. 21) என்ற அவரின் கருத்து இதனை மெய்ப்பிப்பதாக உள்ளது.
இவை தவிர பல வெளிநாட்டுக் நாட்டுக் காசுகளும் தமிழகத்தில் கிடைத்துள்ளன. குறிப்பாக ரோமாணிய நாட்டின் காசுகள் தமிழகத்தின் பல பகுதிகளில் கிடைத்து வருகின்றன. இவற்றின் கால அளவும் தமிழின் தொன்மையை அறிவிக்க உதவுகின்றன. `இய்யல் என்னும் ஊர் சேர நாட்டின் பண்டைத் துறைமுகங்களாகியத் தொண்டி மற்றும் முசிறி ஆகியவைகளுக்கிடையில் அமைந்துள்ளது. இய்யலில் கிடைத்துள்ள காசுகளில் நான்கு காசுகள் கி. மு. இரண்டாம் நூற்றாண்டளவில் ரோமானிய நாட்டில் நிலவிய ` ரிபப்ளிகன்' காலத்தில் வெளியிடப்பட்டவை. அவை மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகின்றன. ஆனாலும் கி. மு. 123 ல் இருந்து கி. மு. 86 ஐச் சார்ந்தது என்பது தெளிவாகும் என்று டாக்டர் பரமேஸ்வரி லால் குப்தா தம்முடைய நூலில் குறிப்பிட்டுள்ளார் (மேற்கோள், மேலது) இக்கருத்தின் முலம் தமிழர்களின் வாணிகப் பெருமை ரோமாபுரி வரை பரவியிருந்தமை தெரியவருகிறது. இவற்றின் முலமாகவும் தமிழின் காலத்தை நிர்ணயித்துக் கொள்ள முடிகின்றது.
ரோமானியத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்த பிளைனி (கி.பி. 70), பெரிபுளுஸ் (கி.பி. 80), தாலமி (கி.பி. 120)ஆகியோர் தம் குறிப்புகளும் தமிழகத்தில் முவேந்தர் ஆட்சி நடைபெற்றதையும், வணிகம் சிறப்புற்றிருந்ததையும் குறிக்கின்றன. (விரிவிற்கு : மா. கந்தசாமி, தமிழகத் தொன்மையும் சிறப்பும், குமரன் பதிப்பகம் , சென்னை)
இவ்வாறு நாணயங்கள் வழியாகவும் தமிழின் தொன்மையை நிறுவிக் கொள்ள முடிகின்றது.
மேற்காட்டியவற்றின் வழியாக சங்க காலம் என்பதன் முடிவுப் பகுதியை உறுதி செய்து கொள்ளமுடிகின்றது. அதாவது கி. பி. முன்றாம் நூற்றாண்டிற்கு முன்னதான வாழ்வினைச் சங்கத் தமிழ் மக்கள் பெற்றிருந்தனர் என்பதே அந்த முடிவாகும். அக்காலத்திலேயே நயத்தக்க நாகரீகம் மிக்க உயர்குடியாக தமிழ்மக்கள் வாழ்ந்தனர் என்பதற்கு அவர்களின் சங்க இலக்கியங்கள் சான்றுபயக்கின்றன.
இந்தக் காலத்திற்கும் முன்னதாக தமிழன் வாழ்ந்திருக்கிறான் என்பதாக தற்போதைய ஆய்வுகள் சென்று கொண்டிருக்கின்றன. ஹரப்பா, மொகஞ்சதாரோ என்ற பண்டைய நாகரீகக் களத்தில் வாழ்ந்த குடி தமிழ்க்குடி என்பதே தற்போதைய ஆய்வுகளின் முடிவாகும். இப்பகுதிகளில் காணக்கிடைக்கும் வரிவடிவங்கள் தமிழின் தொன்மை வடிவங்கள் என்பதைப் பின்லாந்து அறிஞர் `பர்கோலா' நிறுவிவருகிறார். சிந்து சமவெளி நாகரீகம் எனப்படும் இந்த நாகரீகத்தின் முலமே திராவிடம் என்ற கருத்தினை உலக அளவில் உறுதி செய்யும் ஆய்வுகள் தற்போது எழத்தொடங்கிவிட்டன.
ஆரியர்கள், திராவிடர்கள் வடமொழி, தென்மொழி என்ற இருஎல்லைகளில் ஆரியர்களுக்கு முந்தையவர்களாகத் திராவிடர்கள் சிந்துசமவெளியில் வாழ்ந்தனர் என்ற கருத்தினுக்கு வலுசேர்க்கும் வண்ணமாக இவ்வாய்வுகள் தற்போது வலிமை பெற்று வருகின்றன. அங்குக் கிடைத்துள்ள ஆபரணங்கள், கருவிகள், மண்பாண்டங்கள் போன்றவற்றில் உள்ள எழுத்து வடிவங்களை முன்வைத்தே இவ்வாய்வுகள் நிகழ்ந்து வருகின்றன. இவற்றை மெய்ப்பிக்க கிடைத்திருக்கும் சான்றுகளைக் கொண்டு அவற்றின் வழியாகப் பெறப்படும் வாழ்முறை, நாகரீகம், பண்பாடு போன்றவற்றின் அடிப்படையில் திராவிட இனத்தை முன்னைப் பழமைக்கும் முத்த பழமையாக காட்டி நிற்பதே இவ்வாய்வுகளின் நோக்கமாகும்.
இந்திய அரசின் செம்மொழி நிறுவனமும் தமிழின் தொன்மையை ஒத்துக் கொள்கிறது. அது எவ்வளவு காலம் என்பதில்தான் சிக்கல் உள்ளது. செம்மொழி நிறுவனம் தமிழின் தொன்மை என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று குறித்துத் தன்னிறைவை அடைகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கால மொழிக்கு செம்மொழித் தகுதி வழங்கலாம் என்ற கருத்துரு ஏற்கப்பட்டிருப்பினும் தமிழின் தொன்மை அதனைத் தாண்டி மிகவும் முந்தையது என்பதை நிறுவ தமிழ்த் தொன்மை பற்றிய ஆய்வுகள் உதவும் என்பதில் ஐயமில்லை.
நன்றி ஆய்வு பகுதிகள்
(முசிறி நாமக்கல் அருகில் இருக்கும்)
செம்மொழி தமிழ் மண்மொழியாகிப் போவதற்கு, தற்காலத்து தமிழன் போலத்தான் அக்காலத்து தமிழனும் இருந்து இருக்கின்றான் என்பது புரிகின்றது... இக்காலத்து மற்றைய மொழிகள் முதுமையும், நல்ல வளர்ச்சிப் பாதையினை அடைவதுமல்லாது,, அந்த மொழிகள் பேசும் நாட்டிலேயே இருந்து கொண்டு எம்மொழி கற்காலம் பேசுகின்றோம்,,, அதற்கு இக்காலத்து மொழிகள் எந்த ஆட்சேபனையும் செய்யாது ஆதரவுக்கரம் கொடுகின்றார்... ஆனால் தமிழன் இன்று தனித்துவம் பேசி தன்னலம் காத்து, தம் இனத்தினையே மொழியெனக் கூச்சல் போட்டு அழித்தும், அவலத்தில் விட்டும் சுகபோக ஏப்பம் விடுகின்றான்,,
மொழிகள் இலகுவில் அழிந்து போனமைக்கு காரணமே அவர்களின் தனித்துவத்தை அவர்கள் பேணாமல் இருந்தமையே. உலகில் மூத்த மொழிகள் 7 இல் வாழும் மொழிகளாக இருப்பவை தமிழும் சீனமும் மட்டுமே. இதர பண்டைய மொழிகள் அழிந்தே போயின. தமிழின் வலிமையினால் தான் அது இன்றும் நிலைத்து வாழ்கின்றது. அப்பா அம்மா பழையவர்கள் வயதானவர்கள் என எவரும் புதிதாய் மாற்றுவதில்லை தானே? எம் மொழியும் பழமையும் புதுமைகளும் கொண்டு வாழும் சிறப்பு கொண்டது. மொழியை அதன் தொன்மை, மேன்மை உணர்ந்து போற்றி பாதுகாப்பது பழமை வாதம் என்பது தவறான பார்வை.
இறையனார் களவியல் உரையில் காட்டப்படும் முச்சங்க வரலாறு தமிழ் இலக்கியக்களத்தின் தொன்மையை எடுத்துரைப்பதாக உள்ளது. கடல் கொண்ட தென்மதுரையில் இருந்த முதற்சங்கம் 4400 ஆண்டுகள் செயல்பட்டதாகவும், கபாடபுரத்தில் இருந்த இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகள் இருந்ததாகவும், மதுரையில் இருந்த முன்றாம் சங்கம் 1850 ஆண்டுகள் இருந்துச் செயல்பட்டதாகவும் இறையனார் களவியல் உரை கருத்துரைக்கின்றது. இந்நூலின் கருத்தின்படி முச்சங்கங்கங்களின் மொத்த செயல்பாட்டுக் காலம் 9950 ஆண்டுகள் என்பது தெரியவருகிறது.

இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள அழகன் குளம் மற்றும் பூம்புகார் ஆகியவற்றில் நிகழ்த்தப்பெற்றகடலாய்வுகள் வழியாகக் கண்டெடுக்கப் பெற்ற நாணயங்கள் தமிழின் தொன்மையைக் காட்டும் மிகச் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன.

உலகில் சுமார் 3000 மொழிகள் பேசப்படுகிறது அவற்றில் இந்தியாவில் 1600 மொழிகள் பேசப்படுகிறது . இவற்றில் பழமையான மொழிகளாக கருதப்படுபவை தமிழ்., சமஸ்கிரதம்., சீன மொழி.,ஹீப்ரு.,கிரேக்கம்., லத்தீன்.,அராமிக். இவற்றில் தமிழ் சீனம் மட்டுமே வழக்கத்தில் உள்ளது., சமஸ்கிரதம் எழுத்து வடிவம் உண்டு பேச்சி வடிவம் கிடையாது. மற்ற பழமை மொழிகள் முற்றிலும் அழிந்து விட்டது.
இறையனார் களவியல் உரை பின்னால் இருந்த புலவர் ஒருவரால் முன்னாள் நடந்த வரலாறு பற்றி எழுதிய கற்பனை ஆகும். முதல், இடைச் சங்கங்கள் என்பது சரி. கடைச் சங்கம் என்று ஏன் எழுதினார்? முச்சங்கங்கள் மொத்தம் 10000 ஆண்டுகள் நீடித்திருந்தன என்பதை நம்ப முடியாது. முதற்சங்கம் 4450 ஆண்டுகள் நீடித்தது. அதனை ஆண்ட மன்னர்கள் தொகை 89. அதாவது ஒவ்வொரு மன்னனும் 50 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்க வேண்டும். இது சாத்தியமில்லை. இடைச் சங்கம் 3700 ஆண்டுகள் 59 மன்னர்கள். சராசரி 63 ஆண்டுகள். கடைச் சங்கம் 1850 ஆண்டுகள் சராசரி 38 ஆண்டுகள். புலவர்கள் முதல் சங்கம் 4449 புலவர்கள். இடைச்சங்கம் 3700 புலவர்கள். கடைச் சங்கம் 449 புலவர்கள். இந்தத் தரவுகள் மிகைப்படுத்திக் கூறியவை.

Subscribe to:
Posts (Atom)