Tuesday, October 21, 2014
மாமன்னன் இராசேந்திர சோழன்
தென்னிந்தியா முதற்கொண்டு தெற்காசியா வரை தன்னுடைய படைபலத்தை கொண்டு அகண்ட தமிழர் ஆட்சியை நிறுவி இந்நிலங்களை எல்லாம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறி ஆயிரம் ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. சோழனின் பெருமைமிக்க வரலாற்றை தமிழர்கள் நினைவு கூரும் இவ்வேளையில் நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியது நம் கடமையாகும்.
சேர சோழ பாண்டியர்கள் ஆண்டுவந்த நம் தமிழ் மண்ணை அந்நியர்கள் இப்போது ஆட்சி செய்து வருகின்றனர் . நமக்கு தொடர்பே இல்லாத 'இந்தி'யர்களும், நம்மோடு ஒட்டி உறவாடும் திராவிடர்களும் தான் இப்போது தமிழர்களை ஆட்சி செய்து கொண்டு வருகிறார்கள். இவர்களின் பிடியில் இருந்து தமிழ் மண்ணை, தமிழ் மக்களை முற்றிலும் மீட்கும் நடவடிக்கையை தமிழர்கள் நாம் மேற்கொள்ள வேண்டும்.
நம் இனத்தை நாசாமாக்கி , நம் மண்ணை மலடாக்கி, நம் மொழியை அழிவின் விளிம்புக்கு கொண்டு சென்ற அந்நியர்களின் ஆதிக்கத்தை தமிழர்கள் உடைத்தெறிவோம். நம் இனம் , நம் மண், நம் மொழி ஆகிய மூன்று முக்கிய கூறுகளையும் தமிழ்த் தேசிய மக்கள் என்றும் காப்போம் என்று இராசேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டில் சூளுரைப்போம் !!
வாழ்க தமிழ் ! வளர்க தமிழினம் ! சுடர்க தமிழ்நாடே
இராச்சுகுமார் பழனிச்சாமி
வந்தாரை வாழ வைத்து பார்த்த தமிழர்களையே பஞ்சம் பிழைக்க வந்த வேற்றினத்தோர் பின்னாளில் அவர்கள் தமிழர் இல்லை என்பதும் தமிழரை இரண்டாம் நிலைக்கு தள்ளுவதும் அன்னை தமிழை சிதைத்து தமது மொழியை எமக்குள் திணிப்பதும் இன்று நேற்று அல்ல திருவள்ளுவர் காலத்தில் இருந்து நடந்துள்ளது.
அந்த வகையில் இப்போ தெலுங்கரும் , கன்னடர்களும் கரிகாலன், ராசராசன் போன்ற சோழ தமிழ் மன்னர்களை தெலுங்கர்கள் என்றும், மூவேந்தர் வ வந்த குடி தம் போல் வந்தேறு குடிகளே என கூறி வரலாற்றை திரிக்க முனைகின்றன. இதில் விந்தை எதுவும் இல்லை.
தமிழினம் வலிமை கொண்டு எழுகின்ற காலங்களில் எல்லாம் இத்தகையை புனைவு புலவர்கள் எழுவார்கள்.... அவர்கள் பணியே எம் வரலாற்றை திரித்து எம் இனத்தை இழிவாக்கி பேசுவதும் எழுதுவதும்..
இந்த வந்தேறு குடிகளுக்கு பண்டை புகழ் இலக்கியங்களும் இல்லை. மொழி, இன வரலாறும் இல்லை. இவர்கள் எங்கள் முன்னை தமிழ் மாந்தரை தமது குடி என்பது நகைப்பிற்குரியதே. தமிழர்களின் வரலாறு கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கும் முந்தியதாக இருப்பது அறிந்தும் வரலாறு தெரியாத மட மாந்தர் என தமிழரை மதித்து இன்று இப்படி எம் சோழ மன்னர்களை தெலுங்கர் என புனைவதை மன்னிக்க முடியாது. அனுமதிக்கவும் முடியாது..
தெலுங்கு மொழி வரலாறு சில நூறு ஆண்டுகளே... ஆனால் தமிழ் மொழி வரலாறும் இந்த மன்னர்கள வரலாறும் ஆயிரமாயிர ஆண்டுகள் கடந்து மிளிர்கின்றன.
தமிழும் கலைகளும் வளர்த்த மன்னர்கள் எப்படி தெலுங்கர்களாக இருந்திருப்பார்கள்? .
தமிழன் கட்டிய கலைவண்ணம் கொண்ட கோவில்கள் கட்டடங்கள் எல்லாவற்றையும் பின்னாளில் தமதாக்கும் சூழ்ச்சி ஆதிக்கங்கள் கொண்டவர்கள் கூற்றே இந்த சோழர் பற்றிய பொய்மை வரலாற்று இன்றைய திரிபுகள்..
எங்கள் மொழியும் எங்கள் வரலாறும் எங்கள் மண்ணும் மங்காத தமிழ் என்று பாடுவோம்! இதை மாற்றிட நினைக்கும் எவரையும் சாடுவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment